உள்ளூர் செய்திகள்

சின்ன சொக்கிகுளத்தில் உள்ள கிழக்கு ஊராட்சி அலுவலகம் வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.

ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

Published On 2022-11-23 08:27 GMT   |   Update On 2022-11-23 08:27 GMT
  • மதுரையில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
  • நூதன போராட்டம் காரணமாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியுள்ளது.

மதுரை

மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தங்கள் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 2 நாட்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள யூனியன் அலுவலகங்கள், பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் இந்த தற்காலிக விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர்.

அனைத்து ஊழியர்களும் விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தால் அலுவலகங்களில் ஊழியர்கள் வருகையின்றி இன்று வெறிச்சோடி காணப்பட்டது. பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மேலும் நகர் மற்றும் கிராம பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நிர்வகிக்கப்படும் குடிநீர் வழங்கும் பணிக்கும் ஊழியர்கள் வராததால் அந்த பணியிலும் பாதிப்பு ஏற்பட்டது.

நாளையும் போராட்டம் நீடிப்பதால் மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணிகள் பெருமளவில் பாதிக்கப்படும். அரசு ஊழியர்களின் இந்த நூதன போராட்டம் காரணமாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியுள்ளது.

Tags:    

Similar News