உள்ளூர் செய்திகள்

அலங்காநல்லூர் அரசு பள்ளியில் யோகா நிகழ்ச்சி நடந்தது.

சர்வதேச யோகா தினம்

Published On 2022-06-21 09:54 GMT   |   Update On 2022-06-21 09:54 GMT
  • சர்வதேச யோகா தினம் நடந்தது.
  • ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

அலங்காநல்லூர்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சி நடந்தது. உடற்கல்வி ஆசிரியர் காட்வின் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியின் முன்னதாக மாணவர்கள் பள்ளி வளாகத்தில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர்.

யோகா பயிற்சி சுமார் 1 மணிநேரம் நடந்தது. கல்லணை ஒன்றிய கவுன்சிலர் சுப்பாராயலு உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சூரிய நமஸ்காரம், தாடாசனம், விருச்சிகாசனம், புஜங்காசனம் உள்ளிட்ட ஆசனங்கள் கற்றுத்தரப்பட்டது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக உலக யோகா தினத்தையொட்டியோகா பயிற்சி நடத்தப்பட்டது.இந்த பயிற்சி வகுப்புக்கு நீதிபதி கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நீதிபதி வெங்கடலட்சுமி தொடக்கி வைத்தார்.நீதிமன்றப் பணியாளர்கள் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சி வகுப்பில்யோகா பயிற்சி யாளர் சுரேஷ் மற்றும் கராத்தே பயிற்சியாளர் கணேசன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதன் ஏற்பாடுகளைவட்ட சட்டப்பணிகள் குழு சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News