உள்ளூர் செய்திகள்

கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழாவில் வருகிற 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி தெற்குமாசி வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டுள்ள தேரை சுத்தம் செய்யும் பணி நடந்து வருவதை படத்தில் காணலாம். 

கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா

Published On 2023-05-25 08:55 GMT   |   Update On 2023-05-25 08:55 GMT
  • கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா நடக்கிறது.
  • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

மதுரை

மதுரை நகர் மத்தியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் வைகாசி பெருந்திரு விழா விமரிசை யாக கொண்டாடப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நாளை(26-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடி யேற்றம் நடக்கிறது.

14 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, மாலையில் பெருமாள் சிம்மம், கருடன், அனுமார், சேஷ, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. 5-ந்தேதி சுவாமி குதிரை வாக னத்தில் வைகையாற்றில் இறங்கி ராமராயர் மண்ட பத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அங்கு தசா வதார நிகழ்ச்சி நடக்கிறது.

6-ந்தேதி குதிரை வாகனத்தில் கோவிலுக்கு திரும்புகிறார். 8-ந்தேதி உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News