உள்ளூர் செய்திகள்

மதுரை: மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் சிக்கினர்

Published On 2023-02-10 09:25 GMT   |   Update On 2023-02-10 09:34 GMT
  • மதுரையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் சிக்கினர்.
  • போலீசார் சந்தேகத்தின் பேரில் வாகனத்தை சோதனை செய்து பார்த்தனர்.

மதுரை

மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில், எஸ்.எஸ். காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று கோச்சடை-மேலக்கால் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அங்கு 2 மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 3 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். போலீசார் சந்தேகத்தின் பேரில் வாகனத்தை சோதனை செய்து பார்த்தனர். மோட்டார் சைக்கிள்களில் 1.200 கிலோ கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சதாசிவம் நகர் தேவி கருமாரியம்மன் கோவில் தெரு, பழனி மகன் ரிஷிகேஷ்(23), அண்ணா நகர் ராமகிருஷ்ணன் மகன் பிரசன்னா(23), தாசில்தார் நகர், வ.உ.சி தெரு குதூப்முகமது மகன் முகமது ஆனஸ்(22) ஆகியோரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News