மீனாட்சி அம்மன் பட்டு சேலைகள் ரூ.5 கோடிக்கு விற்பனை
- மதுரை மீனாட்சி அம்மன் பட்டு சேலைகள் ரூ.5 கோடிக்கு விற்பனையானது.
- கோவில் நிர்வாகம் பதில் அளித்து அறிக்கை ஒன்றை வழங்கி உள்ளது.
மதுரை
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆண்டு முழு வதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின் றனர். அப்போது அவர்கள் மீனாட்சி அம்மன்- சுந்தரே சுவரருக்கு பட்டுச்சேலை, வேஷ்டி, துண்டுகள் சாத்தி வழிபடுவது வழக்கம். இது தவிர கோவில் நிர்வாகம் சார்பாகவும் பட்டு சேலை கள், வேஷ்டி கள், துண்டுகள் சாத்தப்பட்டு வருகின்றன.
மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு சாத்தப்படும் வேட்டி, சேலை, துண்டுகளை கோவில் நிர்வாகம் வாரம் ஒரு முறை ஏலம் வாயிலாக விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர், "மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பட்டு சேலைகள் விற்பனை மூலம் எவ்வளவு தொகை கிடைத்துள்ளது? என்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு கோவில் நிர்வாகம் பதில் அளித்து அறிக்கை ஒன்றை வழங்கி உள்ளது. அந்த அறிக்கையில் கூறப் பட்டு இருப்பதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அன்பளிப்பாக வந்த பட்டுச்சேலை, வேஷ்டி, துண்டுகள் வகை யில் கோவில் நிர்வாகத்துக்கு கடந்த 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளில் ரூ. 5 கோடியே 45 லட்சத்து 64 ஆயிரத்து 586 கிடைத்து உள்ளது. இதன் மூலம் கிடைத்த வருமானம், கோவிலின் வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.