உள்ளூர் செய்திகள் (District)

ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் நடை பெற்ற அன்னதானத்தை இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Published On 2022-12-24 08:29 GMT   |   Update On 2022-12-24 08:29 GMT
  • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை-அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. செய்திருந்தார்.
  • தொடர்ந்து அந்தப்பகுதியில் பொது மக்கள் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பரங்குன்றம்

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் அ.தி.மு.க. நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவுநாள் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் இன்று அனுசரிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்ட செய லாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து அந்தப்பகுதியில் பொது மக்கள் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ், ஜெ பேரவை மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன், கூட்டுறவு சங்க தலைவர் வேல்ராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் மாயி, துணைச்செயலாளர் செல்வ குமார், வட்டச் செயலாளர்கள் நாகரத்தி னம், பொன்.முருகன், பாலா, எம்.ஆர்.குமார், என். எஸ். பாலமுருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News