உள்ளூர் செய்திகள்

நகர்ப்புற மைய டாக்டர்களுக்கு நோட்டீஸ்

Published On 2023-04-11 08:55 GMT   |   Update On 2023-04-11 08:55 GMT
  • நகர்ப்புற மைய டாக்டர்களின் நோட்டீஸ்க்கு 3 நாட்களில் விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மதுரை

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களில் கடந்த 34 மாதங்களில் எத்தனை பிரசவங்கள் நடந்தன? என்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 592 பிரசவங்கள் மட்டுமே நடந்தது தெரிய வந்தது. அதே காலகட்டத்தில் சுமார் 14 ஆயிரத்து 291 கர்ப்பிணிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்து ரைக்கப்பட்டு உள்ளனர்.

மதுரை மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மையங் களில் குறைவான பிரசவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் விசார ணைக்கு உத்தரவிட்டனர்.

அப்போது மதுரை மாநக ராட்சிக்கு உட்பட்ட கரிசல் குளம், தெற்குவாசல், வண்டியூர், விராட்டிபத்து, முனிச்சாலை, அனுப்பா னடி, பைக்காரா, திருப்பரங் குன்றம் ஆகிய 8 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களில் குறைவான பிரசவம் நடந்தது தெரிய வந்தது.

எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சுகாதார மையங்களின் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் "நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் எதற்காக குறைவான பிரசவம் நடந்து உள்ளது? இதற்கான விளக்கங்களை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மதுரை மாநக ராட்சி நகர்நல அலுவ லர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News