உள்ளூர் செய்திகள்

சொர்க்கவாசல் வழியே வந்த பெருமாளை பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

Published On 2023-01-03 08:07 GMT   |   Update On 2023-01-03 08:33 GMT
  • திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவிலில் நேற்று இரவு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
  • ராப்பத்து நிகழ்ச்சி கடந்த 23-ந் தேதி தொடங்கி 1-ந்தேதி வரை நடந்தது. பகல் பத்து 2-ந்தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.

மேலூர்

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ளது திருமோகூர். இது பிரசித்தி பெற்ற 108 வைணவ தலங்களில் சிறப்பு வாய்ந்தது. இந்த ேகாவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது.

ராப்பத்து நிகழ்ச்சி கடந்த 23-ந் தேதி தொடங்கி 1-ந்தேதி வரை நடந்தது. பகல் பத்து 2-ந்தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான ஆழ்வார்களில் முதன்மையானவராக கருதப்படும் நம்மாழ்வாருக்கு பெருமாள் மோட்சம் தரும் நிகழ்வாக திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. சொர்க்கவாசல் வழியே காளமேகப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

இதனைக்காண ஒத்தக்கடை, மதுரை, மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் செல்வி, செயல் அலுவலர் இளங்கோவன் வழிகாட்டுதலின்படி அலுவலர்கள் செய்திருந்தனர்.

ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

Tags:    

Similar News