தெருநாய்கள் தொல்லையால் அச்சத்தில் உலாவரும் பொதுமக்கள்
- தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருப்பரங்குன்றம்
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 94, 95-வது வார்டு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. திருநகர் பகுதியில் பொதுமக்கள், நடைபயிற்சி செல்வோர், மாணவ-மாணவிகள், பெண்கள் அதிகளவில் சென்று வரும் சாலைகளில் நாய்கள் கூட்டமாக திரிகின்றன.இவைகள் வாகனங்களில் செல்ப வர்களையும் துரத்துகின்றன. இதனால் அவர்கள் பயந்து கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.
மேலும் வீட்டில் வளர்க்கப்படும் கோழி, ஆடு, வாத்து போன்ற வளர்ப்பு பிராணிகளை நாய்கள் தூக்கிச்செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்துட னேயே வெளியே சென்று வருகின்றனர்.
நாய்களுக்கு கருத்தடை செய்யப் பட்டு அவற்றின் இனப்பெருக்கம் தடுக்கப்படுவதாக மாநக ராட்சி சார்பில் கூறப்பட்டா லும், தொடர்ந்து தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனவே கூட்டமாக திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.