- சோழவந்தான் பெருமாள் கோவிலில் புரட்டாசி திருக்கல்யாணம் நடந்தது.
- மாப்பிள்ளை வீட்டாராக அர்ச்சகர் சீத்தாராமன் என்ற ஸ்ரீபதியும், பெண்வீட்டாராக அர்ச்சகர்கள் கிருஷ்ணஹரி என்ற பரதன், ரகுராமனும் செயல்பட்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத உற்சவ விழா நடந்து வருகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
3-ம் சனிக்கிழமை நாளில் சீனிவாசபெருமாள், தாயார் ஸ்ரீதேவி, பூதேவியர்களின் திருக்கல்யாண உற்சவம், பஜனை மண்டபத்தில் நடந்தது. இதில் மாப்பிள்ளை வீட்டாராக அர்ச்சகர் சீத்தாராமன் என்ற ஸ்ரீபதியும், பெண்வீட்டாராக அர்ச்சகர்கள் கிருஷ்ணஹரி என்ற பரதன், ரகுராமனும் செயல்பட்டனர். மாலை மாற்றுதல் நிகழ்ச்சியுடன் ஸ்ரீதேவிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கபட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தேறியது. அலங்கரிக்கபட்ட ஊஞ்சலில் சீனிவாசபெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவியார்கள் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
பக்தர்களுக்கு, பூ, துளசி, மஞ்சள், குங்குமம் மாங்கல்யம் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுதா, பணியாளர்கள் முரளிதரன், விக்னேஷ் ஆகிேயார் செய்திருந்தனர்.