உள்ளூர் செய்திகள்

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு போலீசார் சீல் வைத்தனர்.

புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

Published On 2022-06-18 09:37 GMT   |   Update On 2022-06-18 09:37 GMT
  • மதுரை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
  • கடைக்கான உரிமம் ரத்து செய்து சீல் வைக்கப்படும் என்று மதுரை போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் குட்கா புகையிலை விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.

சமயநல்லூர் பஜாரில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு டீக்கடை நடத்தி வரும் ஊர்மெச்சிகுளம் மீனாட்சிசுந்தரம், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அந்த டீக்கடை மற்றும் பூக்கடைக்கு சீல் வைத்தனர்.

மதுரை மாவட்டத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 54 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களிடம் இருந்து ரூ.85ஆயிரம் மதிப்பு உள்ள 44. 397 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

7 கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை, பதுக்கல் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சம்பந்தப்பட்டவரின் கடைக்கான உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டு சீல் வைக்கப்படும் என்று மதுைர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் எச்சரித்தார்.

Tags:    

Similar News