- வெள்ளரிபட்டியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடந்தது.
- 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மேலூர்
மேலூர் அருகே உள்ள வெள்ளரிபட்டியில் வருவாய் கோட்டாட்சி யர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. பிர்தவுஸ் பாத்திமா தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் மாற்று திறனாளிகளுக்கான பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள் மற்றும் 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி போன்ற உபகரணங்கள் மற்றும் மாதாந்திர உதவித்தொகை, இலவச வீட்டு மனைபட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்ககைள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கல்யாணசுந்தரம், மேலூர் வட்டாட்சியர் சரவண பெருமாள், மதுரை தெற்கு வட்டாட்சியர் முத்துப்பாண்டி, சமூக பாதுகாப்பு திட்டம் தாசில்தார்கள் அனீஸ் சர்தார் (மேலூர்), நாகபூசணம் (கிழக்கு), விக்னேஷ்குமார் (தெற்கு), தலைமையிடத்து துணை வட்டாட்சியர் முரளிதரன், மாவட்ட மாற்றுதிறனாளி நல அலுவலக செயல்திறன் உதவியாளர் ராகவன் மற்றும் அரசு சார்ந்த துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.