உள்ளூர் செய்திகள்

சிறப்பு தடுப்பூசி முகாம்

Published On 2022-07-08 09:59 GMT   |   Update On 2022-07-08 09:59 GMT
  • 3400 மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் 10-ந் தேதி நடக்கிறது
  • றப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நோய் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

மதுரை மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (10-ந்தேதி) 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இது மதுரையில் உள்ள வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடக்கிறது. இங்கு முதல் தவணை, 2-வது தவணை மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 2415 மையங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. இங்கு 1055 ஊழியர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்.மாநகர பகுதிகளில் உள்ள 1000 மையங்களில், 600 ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 3415 மையங்களில், 1655 பணியாளர்கள் மூலம் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும்.

மதுரை மாவட்டத்தில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த 4 லட்சத்து 1707 தகுதி உடையவர்கள். இதில் மாவட்ட அளவில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 740 பேரும், மாநகர பகுதிகளில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 967 பேரும் வசித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் 1லட்சத்து 90 ஆயிரத்து 859 பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி, பூஸ்டர் ஊசி போட தகுதியானவர்களாக உள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் 10-ந் தேதி நடைபெற உள்ள சிறப்பு தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், கூட்டமான இடங்களில் சமூக இடைவெளி கடைபிடித்தல், முககவசம் அணிதல் மற்றும் பொது இடங்களுக்கு சென்று வீடு திரும்பிய பின் முறையாக கைகழுவுதல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

Tags:    

Similar News