- தென்கரை கோவிலில் சூரசம்ஹார விழா நடந்தது.
- மதுரை ஆதித்யா புட்ஸ் நிறுவனர் செந்தில்குமார், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 11-ம் ஆண்டு சூரசம்ஹார விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். தினமும் சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம்-ஆராதனை நடந்தது.நேற்று மாலை அன்னை பராசக்தியிடம் நாகேஸ்வரன் பட்டர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் கோவில் முன்பு சூரசம்ஹாரம் நடந்தது. பக்தர்கள் வெற்றிவேல்முருகா, வீரவேல்முருகா என்று கோஷமிட்டனர். மதுரை ஆதித்யா புட்ஸ் நிறுவனர் செந்தில்குமார், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இன்று காலை பாவாடை தரிசனம் நடந்தது. மாலை 4 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறும்.அனைவருக்கும் மாங்கல்ய பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை பிரதோச கமிட்டியினர் செய்திருந்தனர். செயல் அலுவலர் பாலமுருகன் மற்றும் பணியாளர்கள், பிரதோச கமிட்டியினர் உட்பட ஏராளமான பக்தர்கள் சூரசம்ஹார விழாவில் கலந்து கொண்டனர்.காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.