உள்ளூர் செய்திகள் (District)

மேலமாசி வீதி அய்யப்பன் கோவில் முன்பு அமைக்கப்பட்ட மையத்தில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

3,415 மையங்களில் நடந்த தடுப்பூசி முகாம்

Published On 2022-06-12 09:41 GMT   |   Update On 2022-06-12 09:41 GMT
  • மதுரையில் 3,415 மையங்களில் நடந்த தடுப்பூசி முகாம் நடந்தது.
  • 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

மதுரை

சென்னை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. பொதுமக்கள் நேரடியாக வந்து தடுப்பூசிகளை போட்டு சென்றனர்.

வாக்குச்சாவடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் உள்பட 3415 மையங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.

இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 415 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது. இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

முதல் தவணை தடுப்பூசியை 86.5 சதவீதம் பேரும், 2-வது தவணையை 67 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டு உள்ளனர் என்றார்.

Tags:    

Similar News