உள்ளூர் செய்திகள்

சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஹரித்திரா விநாயகர்.

தஞ்சை ஹரித்ரா விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக விழா

Published On 2023-08-27 10:12 GMT   |   Update On 2023-08-27 10:12 GMT
  • சிறப்பு மண்டலாபிஷேக பூர்த்தி அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அருகில் உள்ள பிள்ளையார்பட்டியில் ஶ்ரீ ஹரித்ரா விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலை மாமன்னன் ராஜராஜன் சோழன் கட்டியனார்.

இங்கு பிரதி சங்கடஹர சதுர்த்தி தோறும் ஹரித்ரா விநாயகருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.

கடந்த மாதம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தினசரி மண்டலாபிஷேக அபிஷேகம் நடைப்பெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று மண்டலாபிஷேக பூர்த்தி விழாவை முன்னிட்டு காலையில் சிறப்பு ஹோமமும் அதனைத் தொடர்ந்து கடம் புறப்பாடும் நடந்தன.

பின்னர் கலச அபிஷேகம் ,சிறப்பு மண்டலாபிஷேக பூர்த்தி அபிஷேகம் ஆராதனைகள், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

இரவில் பக்தி பாடல்கள் இசைக் கச்சேரி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஹரித்திரா விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை மனம் உருகி தரிசனம் செய்தனர்.

அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News