தூத்துக்குடியில் கொட்டும் மழையில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
- மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் அலுவலர்களுடன் மழைநீர் தேங்கிய பகுதிகளை கொட்டும் மழையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
- பழைய மாநகராட்சி அலுவலகத்தின் பின் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகள் பல்வேறு பகுதிகளிலுள்ள கழிவு நீர் ஏற்றும் உந்து நிலையங்களையும் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நேற்று பகலில் பெய்த திடீர் மழையால் சாலைகள், தெருக்களில் மழை நீர் பாய்ந்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் அலுவலர்களுடன் மழைநீர் தேங்கிய பகுதிகளை கொட்டும் மழையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர வின்படி இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளோம். இந்த ஆய்வின் போது கடந்த காலங்களில் மழை நீரினால் மிகவும் பாதிப்ப டைந்த பழைய மாநகராட்சி அலுவலகம், பிரையன்ட் நகர், அம்பேத்கர் நகர், எஸ்.கே.எஸ்.ஆர்.காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, ராஜீவ் நகர் போன்ற அநேக பகுதிகளில் மின் மோட்டார் இல்லாமல் புதிதாக கட்டிய வடிகால்களின் வாட்டத்தில் நீர் செல்வதால் அந்த பகுதிகளில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது நீர் தேங்கிய பகுதிகளில் உடனடியாக நீரானது அப்புறப்படுத்தப்பட்டும், சாலை ஓரங்களில் உள்ள கேட்ச் பிட்ஸ்ல் நீர் செல்வதற்கு வழி செய்யப்பட்டும் உள்ளது. வருங்காலங்களில் இதற்கும் தீர்வுகள் காணப்படும். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் நன்றியினை தெரி வித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆண்டு வரை மழையினால் குளங்களாக காட்சியளித்த எஸ்.டி. பீட்டர் கோவில் தெரு இந்த ஆண்டு மழைநீர் தெரு க்களில் தேங்காமல் மாநக ராட்சி அமைத்த புதிய வடி காலில் தண்ணீர் சென்றது. இதற்காக அப்பகுதி மக்கள் மேயர் ஜெகன் பெரிய சாமியை சந்தித்து நன்றி தெரிவி த்தனர். பின்னர் பழைய மாநகராட்சி அலுவ லகத்தின் பின் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகள் மற்றும் கருத்தபாலத்தில் இருந்து பக்கிள் ஓடை செல்லும் வழியிலுள்ள மின்மாற்றியை இடம் மாற்றி வைப்பதற்கான இடத்தையும், பல்வேறு பகுதிகளிலுள்ள கழிவு நீர் ஏற்றும் உந்து நிலைய ங்களையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பகுதி செயலா ளரும், மாநகர கவுன்சிலருமான சுரேஷ் குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், கவுன்சிலர் ரெக்ஸ்லின், மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.