தருமபுரியில் நடைபயிற்சி செய்யும் இடத்தை அமைச்சர் ஆய்வு
- 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.
- பின்னர் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமினை பார்வையிட்டு சென்றார்.
தருமபுரி,
நடப்போம் நலம் பெறுவோம் எனும் நோக்கில், பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில், 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.
மாவட்ட கலெக்டர் இல்லம் அருகேவுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பாா்வை பொறியாளர் அலுவலகம் முன்பிருந்து நடைப்பயிற்சியினை தொடங்கிய அமைச்சர் செல்பி பாலம் புதிதாக அமைக்கப்பட்ட சிப்காட் சாலை, தடங்கம் மேம்பாலம் வழியாக நடைப்பயிற்சி யினை மேற்கொண்டு மீண்டும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு தனது நடைபயிற்சியினை நிறைவு செய்தார்.
பின்னர் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமினை பார்வையிட்டு சென்றார். இந்த நடைபயிற்சியின் போது மாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தடங்கம் சுப்பிரமணி, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் தர்மசெல்வன், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் ஏ.எஸ். சண்முகம், உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.