உள்ளூர் செய்திகள்

சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் பழுதாகி நிற்கும் இரு சக்கர வாகனங்களால் அவதிப்படும் பொதுமக்கள். 

குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2023-02-23 09:43 GMT   |   Update On 2023-02-23 09:43 GMT
  • இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும், செல்வதற்கு தகுதியற்ற முறையில் உள்ளது.
  • சாலையை சீர் செய்து தரமான சாலையாக அமைத்துக் கொடுக்க வேண்டும்.

 பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் இருந்து வே, முத்தம்பட்டி வழியாக நல்லம்பள்ளியை இணைக்கும் நெடுஞ்சாலை செல்கிறது,

இந்த சாலையில் பொம்மிடி , வே.முத்தம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், சேலம் மாவட்ட த்தின் மோரூர், கணவாய் புதூர் ,எஸ், பாளையம், ஏற்காடு மலை கிராமத்தை சார்ந்தவர்கள் என பல பகுதிகளில் இருக்கும் மக்கள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், சரக்கு கனரக வாகனங்கள் இந்த சாலை வழியாக நல்லம்பள்ளியில் உள்ள நான்கு வழி பாதையை சென்றடைகின்றனர்.

இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் ,பொதுமக்களும் அன்றாட தேவைக்காக தருமபுரி, சேலம் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு இணைப்பு சாலையாகவும் இது உள்ளது.

தற்போது அரூர் -தருமபுரி நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருவதால் மேற்கண்ட பகுதி மக்கள் பெரும்பாலும் இந்த வே. முத்தம்பட்டி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை வே. முத்தம்பட்டி அருகே உள்ள ரெயில் நிலையப் பகுதியில் இருந்து ஆஞ்சநேயர் கோவில், இந்தியன் ஆயில் நிறுவன கிடங்கு வரை செல்லக் கூடிய மலைப்பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் குண்டும் குழியுமாக இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும், செல்வதற்கு தகுதியற்ற முறையில் உள்ளது.

பொதுமக்கள் வேறு வழியின்றி இந்த சிரமத்தையும் தாண்டி தருமபுரிக்கு செல்லும் நிலையில் உள்ளதால், இந்த சாலையில் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், மூலமாக செல்கின்றனர்.

செல்லும் வழியில் ஜல்லிகளிலும் ,குண்டும் குழியிலும் மாட்டி வாகனங்கள் பழுதடைந்து ஆங்காங்கே நிற்பதை காண முடிகிறது.

இதனால் நல்ல விஷயத்திற்கும், அவசர தேவைக்கும் செல்லும் மக்கள் தடைகள் ஏற்பட்டு மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர், அங்கிருக்கும் தொலைபேசி எண் மூலமாக பாவக்கல் பகுதியில் உள்ள பழுது நீக்கும் மெக்கானிக்கை வரவழைத்து வாகனத்தை சரி செய்து மீண்டும் எடுத்துச் செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கும், நேர விரையத்தையும் சந்தித்து வருகின்றனர்.

எனவே வனப்பகுதியில் உள்ள சுமார் எட்டு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலையை சீர் செய்து தரமான சாலையாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று இப்பகுதியை சார்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News