உள்ளூர் செய்திகள்
- சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் நாகூர் சித்திக் கலந்து கொண்டார்.
- நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவடடம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் நாகூர் சித்திக் கலந்து கொண்டார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் "ஒரே ஒரு பூமி "என்ற தலைப்பில் பிளாஸ்டிக் மாசுபாடு, காற்று மாசுபாடு அவற்றை தவிர்க்கும் முறைகள் பற்றி மாணவ -மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்.
2021- 22 ஆம் கல்வியாண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.
பள்ளியின்தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் நன்றி கூறினார்.