உள்ளூர் செய்திகள் (District)

சேந்தமங்கலம், அமுதம் நியாய விலைக்கடையில் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.

நாமக்கல் அருகே ரேசன் கடைகளில் கலெக்டர் ஆய்வு

Published On 2023-05-25 09:19 GMT   |   Update On 2023-05-25 09:19 GMT
  • நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், அமுதம் நியாய விலைக்கடையில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
  • கடைகள் சரியான நேரத்தில் திறக்கப்படுகிறதா என்றும், பொது விநியோக பொருட்கள் அனைத்தும் கிடைகிறதா என்றும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், அமுதம் நியாய விலைக்கடையில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொருட்களின் இருப்பு, விற்பனை செய்யப்பட்டது போக மீதமுள்ள இருப்பினை சரிபார்த்தார்.

பின்னர் பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் கடைகள் சரியான நேரத்தில் திறக்கப்படுகிறதா என்றும், பொது விநியோக பொருட்கள் அனைத்தும் கிடைகிறதா என்றும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.

பின்னர், விற்பனையான பொருட்களின் தொகை விபரங்களை அதிநவீன விற்பனை முனைய கருவியினை (பாயிண்ட் சேல்ஸ் மிசின்) இயக்கி அதில் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் சரிபார்த்தார்.

மேலும், நியாய விலை கடையில் உள்ள குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, சர்க்கரை, பருப்பு மூட்டைகளை நேரில் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சேந்தமங்கலம் வட்டாட்சியர் செந்தில், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News