உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்ட காது கேளாதோர் மாற்றுதிறனாளிகள்.

ஓட்டுநர் உரிமம் வழங்க கோரி காது கேளாத மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-28 07:14 GMT   |   Update On 2023-08-28 07:14 GMT
  • வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க கோரி காது கேளா மற்றும் வாய் பேச இயலாத மாற்றுதிறனாளிகள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • காதொளி கருவி கொண்டு மருத்துவர் ஆலோசனைப்படி வருகிற புதன்கிழமை முகாம் அமைத்து ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

நாமக்கல்:

வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க கோரி காது கேளா மற்றும் வாய் பேச இயலாத மாற்றுதிறனாளிகள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த நாமக்கல் ஆர்.டி.ஓ. சரவணன், நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், நல்லிபாளையம் இன்ஸ்பெக்டர் சுமதி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக செயல்திறன் உதவியாளர் சுமதி ஆகியோர் அங்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது காதொளி கருவி இருந்தும் வட்டார அலுவலகத்தில் வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க மறுப்பதாக மாற்றுத் திறனாளிகள் குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து காதொளி கருவி கொண்டு மருத்துவர் ஆலோசனைப்படி வருகிற புதன்கிழமை முகாம் அமைத்து ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

Tags:    

Similar News