கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலி
- பரமத்தி அருகே உள்ள வில்லி பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிர மணி
- நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் வலது புறமாக சென்றுள்ளார். அப்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சுப்பிரமணி சென்ற மொபட் மீது மோதியது
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள வில்லி பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிர மணி (வயது 48). கூலி தொழிலாளி. இவரது மனைவி பேபி (45).
நேற்று சுப்பிரமணி பரமத்தி அருகே உள்ள கோனூருக்கு தனது மொபட்டில் சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து கந்தம்பாளையத்திற்கு மொபட்டில் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் வலது புறமாக சென்றுள்ளார். அப்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சுப்பிரமணி சென்ற மொபட் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார்.
இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோ தனை செய்த மருத்துவர்கள் சுப்பிரமணி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சேலம் சங்கர் நகரை சேர்ந்த மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.