அங்காளம்மன் கோவில் பூசாரி நியமிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை
- புதுச்சத்திரம் அடுத்த பாய்ச்சல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கடந்தபட்டி பகுதியில் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவின்படி நாமக்கல் மாவட்ட வருவாய்துறையின் சார்பில் கோவில் திறக்கப்பட்டது.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த பாய்ச்சல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கடந்தபட்டி பகுதியில் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 13 வருடங்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவின்படி நாமக்கல் மாவட்ட வருவாய்துறையின் சார்பில் கோவில் திறக்கப்பட்டது.
ஏற்கனவே வழக்கமாக யார் பூைஜ செய்தார்களோ அந்த பூசாரிகளே பூஜை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள் சார்பில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் கோர்ட்டு உத்தரவுபடி பூசாரி நியமிக்க வேண்டும் என அமைதிபேச்சுவார்தையில் தீர்வு செய்யப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.
இதையடுத்து மற்றொரு தரப்பினர் கோர்ட்டு உத்தரவுபடி பூசாரி நியமித்து பூைஜ நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வெளிநடப்பு செய்தவர்கள் நாங்களும் பூசாரி நியமித்து பூைஜ செய்கிறோம் என கோரிக்கை வைத்தனர். அதற்கு மற்றொரு தரப்பினர் திருவிழா முடிந்து பிறகு அமைதி பேச்சுவார்தை நடத்தி யாரை நியமிக்கலாம் என முடிவு செய்யலாம் என தெரிவித்தனர்.
இதனால் மோதல் ஏற்பட்டு விடாமல் இருக்க முன்எச்சரிக்கையாக கோவில் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.