உள்ளூர் செய்திகள் (District)

 விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்ட காட்சி.

குன்னமலை ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

Published On 2022-08-26 10:42 GMT   |   Update On 2022-08-26 10:42 GMT
  • நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.
  • நிகழ்ச்சிக்கு குன்னமலை ஊராட்சித் தலைவர் பூங்கொடி குணசேகரன் தலைமை தாங்கினார்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் குன்னமலை ஊராட்சி சார்பில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குன்னமலை ஊராட்சித் தலைவர் பூங்கொடி குணசேகரன் தலைமை தாங்கினார்.

ஊராட்சி பகுதிகளை சேர்ந்த வீதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது.பொதுமக்கள் துணிப்பை பயன்படுத்த வேண்டும். என் குப்பை என் பொறுப்பு. என் கிராமம் தூய்மை கிராமம் உள்ளிட்ட பல்வேறு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

அதை தொடர்ந்து நம்ம ஊரு சூப்பரு குறித்தவிழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை ஊராட்சித் தலைவர் பூங்கொடி குணசேகரன் தொடங்கி வைத்தார். ஊர்வலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வந்தடைந்தது.

நிகழ்ச்சியில் பரமத்தி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியம்மாள், துணைத் தலைவர் லட்சுமி, ஊராட்சி செயலர் பரிமளம், ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் உள்ள தெருக்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

Tags:    

Similar News