என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "EVENT"
- புதிய தொழில்நுட்பத்துக்கு ஆப்பிள் இன்டலிஜென்ஸ் [ஏ.ஐ] என பெயரிடப்பட்டுள்ளது.
- டைப் செய்த வார்த்தைகளுக்கு ஏற்றபடி புதிய எமோஜிகளை உருவாக்கும் வகையில் ஏஐ தொழிநுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் WWDC 2024 நிகழ்ச்சி நாளை ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் iOS 18, ஐ- பாட் OS 18, மாக் OS 15, வாட்ச் OS 11, டிவி OS 18 மற்றும் விஷன் OS 2 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த வருட நிகழ்வில் ஆப்பிள் செயலிகளிலிலும், சேவைகளிலும் ஆக்கபூர்வமான வகையில் ஏ.ஐ தொழிநுட்பத்தை பயணவபடுத்துவது குறித்தும், பயனர்களின் தனியுரிமையையும் , பாதுகாப்பையும் உறுதி செய்வதிலும் ஆப்பிள் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது.
இந்த நிகழ்வில் ஐ-போன், ஐ- பட மற்றும் மாக் ஆகிய சாதனங்களில் புதியதாக ஒருங்கிணைந்த ஏஐ தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு ஆப்பிள் இன்டலிஜென்ஸ் [ஏ.ஐ] என பெயரிடப்பட்டுள்ளது. இது ஓபன் ஏஐ, சாட் ஜிபிடி செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்யும்.
ஆப்பிளின் புதிய தொழில்நுட்பமான ஏ.ஐ யில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. பயனர்களின் தினசரி பயன்பாட்டை எளிமைப்படுத்தும் வகையில் ஆப்பிள் சாதனங்களில் உள்ள செயலிகளில் இந்த ஏஐ தொழில்நுட்பம் ஒருங்கிணைந்து அறிமுகப்படுத்தப்படும். ஆப்ட் இன் மற்றும் பீட்டா மென்பொருள் கொண்ட சாதனங்களிலும் இந்த புதிய ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்களை அடையலாம்.
ஆப்பிள் ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏ ஐ கருவிகள் ஆகியவற்றை கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் ப்ராசஸிங்கில் செய்ய பயன்படுத்தலாம். மேம்படுதிகப்பட்ட இந்த ஏஐ தொழிநுட்பத்தின் மூலம் பயனர்களின் தனியுரிமைகளும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
குறுஞ்செய்திகள், நோட்டிபிகேஷன்கள், இணையதள பக்கங்கள் ஆகியவற்றின் சுருக்கங்களை இந்த புதிய ஏஐ பயனர்களின் பார்வைக்கு வழங்கும். இதன்மூலம் எளிதில் அனைத்தையும் குறித்த சுருக்கங்களை விரைவில் அறிய முடியும்.
மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று பயனர்களுக்கு அறிவுறுத்தும் வசதியில் ஏஐ தொழில்நுட்பத்தில் அறிமுகமாகிறது.
ஆப்பிள் சாதனங்களில் உள்ள செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் டிஜிட்டல் அசிஸ்டண்டாக செயல்ப்படும் 'சிரி' ஏஐ மூலம் மேம்படுத்தபடும். முக்கியமாக ஒரே நேரத்தில் பல்வேறு செயல்களை செய்யும் வகையில் அடுத்த வருடத்துக்குள் சிரி தயாராகிவிடும் என்ற கூடுதல் தகவலையும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.
ஜிமெயிலில் இருப்பதைப் போல இமெயிலிலும் மெயில்களை தானாக வகைப்படுத்தும் அம்சம் சேர்க்கப்பட உள்ளது. மெசேஜ்கள் மற்றும் சாட் - களில் டைப் செய்த வார்த்தைகளுக்கு ஏற்றபடி புதிய எமோஜிகளை உருவாக்கும் வகையில் ஏஐ தொழிநுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாய்ஸ் மெமோ அனுப்புவது, புகைப்பட செயலிகளில் எடிட்டிங்கை எளிமையாக்குவது உள்ளிட்ட அம்சங்களும் ஏஐ யில் அடங்கும்.
அதுமட்டுமின்றி பல்வேறு மென்பொருள் அப்டேட்களும் நாளைய நிகழ்ச்சியில் அறிமுகமாக உள்ளது. அதன்படி iOS 18 ஹோம் ஸ்க்ரீன், கன்ட்ரோல் சென்டர், செட்டிங்ஸ் செயலி, மெசேஜிங் செயலி, பாஸ்வேர்டு நிர்வகிக்கும் செயலி, காலகுக்கேட்டார், காலெண்டர் ஆகிய செயலிகளும் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட் செட், ஆப்பிள் வாட்ச், மற்றும் ஆப்பிள் டிவி ஆகியவற்றில் புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
- சுற்றுலாத்துறையும் தனியாருடன் இணைந்து பொதுமக்களை கவரும் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்கின்றனர்.
- டிசம்பர் 3-வது வாரத்தில் நகரம் முழுவதும் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளை வரவேற்று பதாகைகள் வைக்கப்படுகிறது.
புதுச்சேரி:
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆண்டு தோறும் பெருகி வருகிறது.
புத்தாண்டு கொண்டாடுவதற்காகவே பல நாடுகளில் பல்வேறு நகரங்களை சுற்றுலா பயணிகள் தேர்வு செய்கின்றனர்.
சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, துபாய், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நகரங்கள் உலகளவில் புத்தாண்டு கொண்டாடும் நகரமாக உள்ளது.
இதேபோல இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அதிகளவில் கோவாவை மக்கள் தேர்வு செய்கின்றனர்.
ஆனால் கடந்த சில ஆண்டாக புத்தாண்டு கொண்டாட்டங்களின் நகரமாக சுற்றுலா பயணிகளை புதுவை கவர்ந்துள்ளது.
டிசம்பர் மாத இறுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவது பலமடங்கு அதிகரிக்கிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரண மாக பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிகின்றனர்.
இந்த காலகட்டத்தில் புதுவை குளிரான கோடை வாசஸ்தலம் போல உள்ளது. இதுவும் சுற்றுலா பயணிகள் வருகையை ஈர்க்கிறது.
டிசம்பர் மாதம் தொடக்கத்திலேயே புதுவையில் உள்ள நட்சத்திர விடுதிகள், ரிசார்ட், ஓட்டல் களில் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிக்கு திட்டமிட தொடங்குகின்றனர். டிசம்பர் 3-வது வாரத்தில் நகரம் முழுவதும் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளை வரவேற்று பதாகைகள் வைக்கப்படுகிறது.
ஆன்லைன் மூலம் இந்த கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன்பதிவும் தொடங்குகிறது. விடுதி அறைகளுக்கும் முன்பதிவு தீவிரமாக உள்ளது.
புதுவை அரசின் சுற்றுலாத்துறையும் தனியாருடன் இணைந்து பொதுமக்களை கவரும் கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்கின்றனர்.
புதுவை கடற்கரை சாலையில் புத்தாண்டை வரவேற்கும் டிசம்பர் 31-ந் தேதி மாலை தொடங்கி முதல் இரவு 12 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இது மட்டுமின்றி அரசின் சீகல்ஸ், நோணாங்குப்பம் படகு குழாம், பழைய துறைமுக வளாகத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடக்கிறது. புதுவையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கடற்கரை களிலும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்த தயாராகி வருகிறது.
புதுவையை சுற்றியுள்ள தமிழக பகுதிகளில் இருந்தும் புத்தாண்டு கொண்டாட் டத்துக்கு புதுவையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களின் நகரமாக புதுவை மாறியுள்ளது.
- நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வரும் 24-ந்தேதி வரை நடைபெற்றது.
- சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் அமைந்துள்ள கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் உடனுறை முல்லைவனநாதர் திருக்கோயிலில் நவராத்திரிவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வரும் 24-ந்தேதி வரை நடைபெற்றது.
இதில் 23-ந்தேதி சரஸ்வதி பூஜை தினத்தன்று காலை கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைள் நடைபெற்றது.
நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று விஜயதசமியை முன்னிட்டு மாலை சுவாமி சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சியும்.
அதனை தொடர்ந்து தெப்ப திருவிழாவும் நடைபெற்றது.
தெப்ப திருவிழா நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், கோயில் செயல் ,.அலுவலர் அசோக்குமார் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளர்கள், கிராமவாசிகள் செய்து இருந்தனர்.
- மேட்டூர் அருகே கோல்நாயக்கன்பட்டியில் தமிழ்நாடு போலீசார் சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மரியமுத்து, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், தி.மு.க மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மேட்டூர் அருகே கோல்நாயக்கன்பட்டியில் தமிழ்நாடு போலீசார் சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மரியமுத்து, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், தி.மு.க மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தங்கள் பகுதிகளில் ஏதேனும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெற்றால் அதனை உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
- பலராமன் மனைவி மற்றும் குடும்பத்தார் நேற்று இரவே விக்கிரவாண்டிக்கு சென்று விட்டனர்.
- அவர், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சித்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பலராமன் (வயது 73). விவசாயி. இவரது உறவினரின் புதிய வீட்டின் புதுமனை புகுவிழா முண்டியம்பாக்கத்தில் இன்று நடக்கிறது. இதற்காக பலராமன் மனைவி மற்றும் குடும்பத்தார் நேற்று இரவே விக்கிரவாண்டிக்கு சென்று விட்டனர்.இந்நிலையில் விவசாயி பலராமன் இன்று அதிகாலை முண்டியம்பாக்கத்திற்கு புறப்பட்டார். பஸ் ஏறி விழுப்புரத்திற்கு வந்தார். அங்கிருந்து பஸ் மூலம் முண்டியம்பாக்கம் வந்த அவர், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சித்தார்.
அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் பலராமன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பலராமன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இது குறித்த புகாரின் பேரில் விரைந்து சென்ற விக்கிரவாண்டி போலீசார், விவசாயி பலராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற விவசாயி சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தொடங்கி வைத்தார்.
- நீலகிரி மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக.,வினர் மதுரை மாநாட்டில் பஙகேற்பர் என்று தெரிவித்தனர்.
ஊட்டி,
ஊட்டியில் அ.தி.மு.க மாநாடு அழைப்பிதழ் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி மற்றும் ஆட்டோ பேரணி நடந்தது. இதனை மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தொடங்கி வைத்தார்.
அப்போது பேரணியில் சென்ற ஆட்டோக்களில் ஊட்டி நகர செயலாளர் சண்முகம் ஏற்பாட்டின்பேரில் அ.தி.மு.க மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
ஆட்டோ பேரணியில் பங்கேற்ற நிர்வாகிகள், நீலகிரி மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக.,வினர் மதுரை மாநாட்டில் பஙகேற்பர் என்று தெரிவித்தனர். இதில் முன்னாள் அவைத் தலைவர் தேனாடு லட்சுமணன், பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ் , பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம் பாபு, நகர இளைஞர் அணி செயலாளர் விசாந்த், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ராஜகோபால், எம்ஜிஆர் நகர் மன்ற தலைவர் ஜெயராமன், நகர மன்ற உறுப்பினர் லயோக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- சேலம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு சங்ககிரி கோட்ட கலால் தாசில்தார் வேலாயுதம் தலைமை வகித்தார். கலால் வருவாய் ஆய்வாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
சங்ககிரி:
சங்ககிரியில், சேலம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்ககிரி கோட்ட கலால் தாசில்தார் வேலாயுதம் தலைமை வகித்தார். கலால் வருவாய் ஆய்வாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், கிராம நிர்வாக அலுவலர்கள் சதீஷ் பிரபு (சங்ககிரி), சண்முகம் (சின்னாக்கவுண்டனூர்), கிராம உதவியாளர்கள் தீனதயாளன், சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், திருச்செங்கோடு ரோடு உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.
- நேற்றிரவு சித்திரை முழு நிலவு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
- விழாவில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமான பூம்புகாரில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்திரை முழு நிலவு விழா (இந்திர விழா) நடைபெறுவது வழக்கம்.
பன்னெடுங்காலமாக நடைபெற்று வந்த இவ்விழா மழைக்கு தலைவனான இந்திரனை வணங்குவதாக ஐதீகம். பண்டைய காலத்தில் இவ்விழா தடைபட்டதால் பூம்புகார் கடல் கோளால் அழிந்ததாகவும் வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடர்ந்து அரசின் சார்பாக நடைபெற்று வந்த இந்திர விழா பல ஆண்டுகளாக தடைபட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்திர திருவிழாவை நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நேற்று இரவு சித்திரை முழு நிலவு (இந்திர திருவிழா) வெகு விமர்சையாக நடைபெற்றது.
கொற்றவை பந்தலின் அருகே நடைபெற்ற விழாவில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார், ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், திமுக பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன் முன்னிலை வகித்தனர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செ ல்வம் ஆகியோர் பங்கேற்று சிறப்புறை யாற்றினர்.
தப்பாட்டம்,நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, கிராமிய ஆடல் பாடல் நிகழ்ச்சி, சிலப்பதிகார நாட்டிய நாடகம், பொம்மலாட்ட கலைஞர்களின் சிலப்பதிகார கதை உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திரளான சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் சான்றிதழ்களுடன் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.
- பள்ளியில் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதில் திருச்செங்கோடு புறநகர காவல் ஆய்வாளர் பாரதி மோகன் கலந்துகொண்டு பேசினார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு புறநகர காவல் ஆய்வாளர் பாரதி மோகன் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், மாணவிகள் பள்ளி செல்லும் போது வீட்டின் அருகிலோ, பேருந்து நிறுத்தத்திலோ, பேருந்திலோ யாராவது பாலியல் சீண்டல் செய்தால் அவர் மீது புகார் செய்து தண்டனை பெற்றுத் தர முடியும். மேலும் காவல்துறைக்கு உள்ள பிரத்யேக தொலைபேசி எண்ணில் அழைத்து பேசி னாலும் 1091 என்ற எண்ணில் அழைத்து பேசி னாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளையும் காவல்துறை எடுத்து வரு கிறது. எனவே மாணவிகள், பெண் குழந்தைகள் பயப்ப டாமல் சமூக விரோதிகள் குறித்தும் பாலியல் சீண்டல் செய்யும் நபர்கள் குறித்தும் புகார் செய்ய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மலர்விழி, ரஞ்சித் குமார், உளவுத்துறை காவலர் சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- ராமநாதபுரம் நகர் தலைவர் முஹம்மது காசீம்,நகர் துணை செயலாளர் சுபைர், இளைஞரனி அன்சர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
ராமநாதபுரம்
பனைக்குளத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் மாநில தகவல் தொழில்நுட்ப இணை ஒருங்கினைப்பாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட துணை தலைவர் சாதுல்லாக்கான், மாவட்ட உதவி செயலாளர் பனைக்குளம் முகம்மது இக்பால், மாவட்ட உதவி செயலாளர் ஆசீக் உசேன், மாநில மாணவரனி ஈரோடு முஹம்மது பாருக், மாவட்ட தகவல் தொழில் நுட்ப ஒருங்கினைப்பாளர் சுல்தான் சலாவுதீன், பனைக்குளம் கிருஷ்ணாபுரம் கணேசன் தலைமையி்ல் ஐந்து நபர்கள்,சோகையன் தோப்பு சேர்ந்த இரண்டு நபர்களும்,பொன்குளம் ஆதிராஜ் , சக்திமுருகன் பனைக்குளம் துணை செயலாளர் சீமான் என்ற சாகுல் ஹமீது, பனைக்குளம் பொருளாளர் சபிக் ரஹ்மான், பனைக்குளம் முஸ்லீம் பரிபாலன சபை, முஸ்லீம் நிர்வாக சபை,ஐக்கிய முஸ்லிம் சங்கம் வாலிப முஸ்லிம் சங்கத்தை சேர்ந்தவர்கள், ராமநாதபுரம் நகர் தலைவர் முஹம்மது காசீம்,நகர் துணை செயலாளர் சுபைர், இளைஞரனி அன்சர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்
- பணியின்போது வீரமரண மடைந்த வீரர்களுக்கு, நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக
- இன்று வீர வணக்கமும், 2 நிமிட மவுன அஞ்சலி அனுசரித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் தீத்தொண்டு நாளை அனுசரிக்கும் விதமாக, பணியின்போது வீரமரண மடைந்த வீரர்களுக்கு, நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக இன்று வீர வணக்கமும், 2 நிமிட மவுன அஞ்சலி அனுசரித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் தீத்தொண்டுநாள் வாரவிழாவை முன்னிட்டு காலை, மாலை 2 நேரமும் பொதுமக்கள் கூடுமிடங்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் தீத்தடுப்பு பிரசாரங்கள், செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பித்தும், தீ அபாயம் உள்ள இடங்களில் தீ தடுப்பு ஒத்திகையும் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
- நாட்டியாஞ்சலி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- இசை கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கலை பண்பாட்டு துறை, தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம், மாவட்ட அரசு இசைப்பள்ளி, சவகர் சிறுவர் மன்றம் ஆகியவன சார்பில் தமிழிசை விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.
தஞ்சை கலை பண்பாட்டு துறை மைய மண்டல உதவி இயக்குனர் நீலமேகம், விஸ்வநாதர் கோவில் அறங்காவலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவை தமிழ் சங்க தலைவர் மார்கோனி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து மங்கல இசைகள், தேவாரப் பண்ணிசை, நாட்டியாஞ்சலி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் தமிழ்ச்சங்க செயலாளர் கோவி நடராஜன், பொருளாளர் சொர்ணபால், மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
விழாவில் இசை கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் மிருதங்க ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்