உள்ளூர் செய்திகள்

நெல்லையப்பர் கோவில் முன்பு ஏற்றப்பட்ட தேசிய கொடிக்கு காந்திமதி யானை மரியாதை செலுத்திய காட்சி.

நெல்லையப்பர் கோவில் முன்பு தேசிய கொடி ஏற்றி பூஜை - காந்திமதி யானை மரியாதை செய்தது

Published On 2023-01-26 09:33 GMT   |   Update On 2023-01-26 09:33 GMT
  • குடியரசு தினவிழாவை யொட்டி தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சில கோவில்களில் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம்.
  • அதன்படி பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றப்படும்.

நெல்லை:

குடியரசு தினவிழாவை யொட்டி தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சில கோவில்களில் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம்.

அதன்படி பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றப்படும். இந்த ஆண்டும் சுவாமி நெல்லையப்பர் கோவில் முன்பு விக்டோரியா மகாராணி வழங்கிய விளக்குத்தூண் அருகே தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வாசல் முன்பு ஏற்றப்பட்ட தேசிய கொடிக்கு கோவில் யானை காந்திமதி பிளிறியபடி மரியாதை செய்தது.

அதனை தொடர்ந்து கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர்.

அதன்பின்னர் கோவில் அர்ச்சகர்கள் தேசிய கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டினர்.மேலும் அங்கிருந்தவர்களுக்கு விபூதி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டு இனிப்புகளும் கொடுக்கப்பட்டது. 

Tags:    

Similar News