உள்ளூர் செய்திகள்

நெல்லையில் புதிதாக 32 பேருக்கு கொரோனா

Published On 2022-06-24 09:41 GMT   |   Update On 2022-06-24 09:41 GMT
  • இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்ட 87 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்தது.

நெல்லை:

தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு நேற்று ஆயிரத்தை தாண்டி உள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் தினசரி பாதிப்பு இரட்டை இலக்கத்திற்கு சென்றது. நேற்று மாவட்டம் முழுவதும் புதிதாக 18 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் உள்பட இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்ட 87 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதிகளை சேர்ந்தவர்கள் 14 பேர் ஆவர்.

நாங்குநேரி பகுதியில் 5 பேர், அம்பையில் 4, பாளை, வள்ளியூரில் தலா 3, சேரன்மகாதேவி, களக்காடு, மானூரில் தலா ஒருவரும் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்தது.

Tags:    

Similar News