உள்ளூர் செய்திகள்

புதிய பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சிம்கார்டு இலவசம்

Published On 2022-08-22 09:03 GMT   |   Update On 2022-08-22 09:03 GMT
  • ரூ.999 திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.777 மட்டுமே செலுத்தி 75 நாட்கள் பயன் அடையலாம்.
  • பிராட்பேண்ட் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு மாத கட்டணத்தில் அதிகபட்சமாக ரூ.500 கட்டண சலுகையாக வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர்:

75-வது சுதந்திர தினத்தையொட்டி பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்குகிறது.

அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி வரை பிரீடம்-75 என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் பாரத்பைபர் இணைப்பு மாதம் ரூ.449 மற்றும் ரூ.599 திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக ரூ.275 மட்டுமே செலுத்தி 75 நாட்கள் பயன் அடையலாம்.

மேலும் மாதம் ரூ.999 திட்டத்தை தேர்ந் தெடுக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.777 மட்டுமே செலுத்தி 75 நாட்கள் பயன் அடையலாம். குறிப்பிட்ட சில தரைவழி பிராட்பேண்ட் திட்ட இணைப்புகளுக்கு வைபை மோடம் இலவசமாக வழங்கப்படுகிறது.

புதிய பிராட்பேண்ட் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு மாத கட்டணத்தில் 90 சதவீதம் வரை அதிகபட்சமாக ரூ.500 கட்டண சலுகையாக வழங்கப்படுகிறது.

தரைவழி தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கை–யாளர்கள், தங்களது தொலைபேசி எண்களை மாற்றாமலேயே பாரத் பைபர் திட்டத்திற்கு எந்த வித அதிக கட்டணங்களும் இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம்.

மேலும் சலுகையாக மாதாந்திர கட்டணத்தில் ரூ.200 வீதம் 6 மாதங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும். புதிதாக இணைப்புகளை பெறும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிர்மாண கட்டணம் ரூ.500 முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.

புதிய பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சிம்கார்டு இலவசமாக வழங்கப்படும்.

மேற்கண்ட தகவலை தஞ்சை பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் பால.சந்திரசேனா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News