நெல்லையில் இன்று ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
- ஆய்வின்போது கெட்டுப்போனதாக கண்டுபிடிக்கப்பட்ட இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
- தவறு நடைபெற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.
நெல்லை:
நாமக்கல் மாவட்டத்தில் காலாவதியான சவர்மா சாப்பிட்ட ஒருவர் உயிரி ழந்தார். மேலும் சிலர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
உணவகங்களில் சோதனை
இதன் எதிரொலியாக நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி மாநகரப் பகுதி முழுவதும் உள்ள ஓட்டல்களில் தரமான உணவுகள் விற்கப்படு கிறதா? சிக்கன், மட்டன் உள்ளிட்ட இறைச்சிகள் காலாவதியாகி அதனை பயன்படுத்துகிறார்களா? என்பது குறித்து 4 மண்டலங்களிலும் ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி நெல்லை மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் வழிகாட்டலில் இன்று சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் டவுன் பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இறைச்சி பறிமுதல்
டவுன் பகுதிகளில் நெல்லை கண்ணன் சாலையில் உள்ள அசைவ ஓட்டல் மற்றும் சுவாமி சன்னதி சாலையில் உள்ள ஓட்டல்கள், டவுன் பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கெட்டுப்போனதாக கண்டுபிடிக்கப்பட்ட இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. சில கடைக்காரர்களுக்கு அப ராதமும் விதிக்கப்பட்டது.
அப்போது தூய்மை இந்தியா திட்ட பணியாளர் சங்கர், உதவியாளர் இசக்கி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதே போல் கடைகளில் கெட்டு போன சிக்கன் பயன்படுத்தக்கூடாது. தவறு நடைபெற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடப் பட்டது.
களக்காடு
களக்காடு நகராட்சி பகுதியில், அசைவ உண வகங்களில் நகராட்சி சுகா தார ஆய்வாளர் முத்து ராமலிங்கம் தலைமையில் மேற்பார்வையாளர் வேலு மற்றும் அதிகாரிகள் சோ தனை நடத்தினர். அப்போது உணவகங்களில் உணவு தயாரிக்கும் இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. சவர்மா, சிக்கன், மட்டன் போன்ற உணவுகளை, உற்பத்தி செய்கின்ற அன்றே விற்பனை செய்ய வேண்டும் என்று உணவக உரிமை யாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு ரூ.1000 அபரா தமும் விதிக்கப்பட்டது.