உள்ளூர் செய்திகள்

தொழிற்பள்ளி தொடங்க ஆன்லைனில் அங்கீகாரம்

Published On 2023-01-13 09:30 GMT   |   Update On 2023-01-13 09:30 GMT
  • 2023-2024-ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் ெதாடங்குதல் , அங்கீகாரம் புதுப்பித்தல் தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பக் கட்ட ணமாக ரூ. 5 ஆயிரம் மற்றும் ஆய்வு கட்டணமாக ரூ. 8 ஆயிரம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.02.2023.

சேலம்:

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 2023-2024-ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் ெதாடங்குதல் , அங்கீகாரம் புதுப்பித்தல் தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

2023-2024-ஆம் கல்வி யாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போது

மானது. விண்ணப்பிக்க வுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பித்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்ட

ணம் மற்றும் ஆய்வுக்கட்ட ணம் RTGS, NEFT மூலம்

செலுத்த வேண்டும். அனைத்து தொழிற்பிரிவு களுக்கும் சேர்த்து விண்ணப்பக் கட்ட ணமாக ரூ. 5 ஆயிரம் மற்றும் ஆய்வு கட்டணமாக ரூ. 8 ஆயிரம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.02.2023. இதற்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும், அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறி

வுரைகளை அறிந்துகொள்ள www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ricsalem7@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 94990 55827 என்ற கைப்பேசி எண் வாயிலாகவும் தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News