உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு-கலெக்டர் தகவல்

Published On 2022-09-01 10:26 GMT   |   Update On 2022-09-01 10:26 GMT
  • குறுவை நெல் அறுவடையை முன்னிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
  • விவசாயிகள் தங்களது நெல்லை அருகில் உள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன் அடையலாம்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

தஞ்சை மாவட்டத்தில் எதிர்வரும் 2022-23-ம் ஆண்டு குறுவை நெல் அறுவடையை முன்னிட்டு தமிழ்நாடு நுகர்பொருள்
வாணிகழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.

பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் குறுவை பருவத்திற்கு அரசால் நெல்லுக்கான கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ளபடி சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2060-ம், மாநில அரசின் ஊக்கத்தொகை ரூ.100-ம் என மொத்தம் ரூ.2160 வழங்கப்படும்.

அதேபோல் பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2040-ம், ஊக்கத்தொகை ரூ.75-ம் என மொத்தம் ரூ.2115 வழங்கப்படும்.

விவசாயிகள் தங்களது நெல்லை அருகில் உள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன் அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News