உள்ளூர் செய்திகள்

மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவர்களுக்கு ஓவியப்போட்டிகள்- 4 நாட்கள் நடக்கிறது

Published On 2023-05-16 09:03 GMT   |   Update On 2023-05-16 09:03 GMT
  • 18-ந் தேதி `எனது கலைப்பொருட்கள் சேகரிப்பு’ என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெறுகிறது.
  • 21-ந் தேதி பொது மக்களுக்கான திறந்த வெளிப்போட்டி நடைபெற உள்ளது.

நெல்லை:

சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நாளை மறுநாள் (18-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை 4 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சி கள் நடத்தப்படுகிறது.

18-ந் தேதி `எனது கலைப்பொருட்கள் சேகரிப்பு' என்ற தலைப்பில் கண்காட்சியும், 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு 6 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு `அருங்காட்சியக ஓவியத்தில் வர்ணம் தீட்டுதல்' போட்டியும் நடத்தப்படு கிறது.

அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு `அருங்காட்சியங்களின் வரலாறு' என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான பணிமனையும், 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணிக்கு பொது மக்களுக்கான `அருங்காட்சி யங்களையும் அதன் இடங்களையும் சரியாகப் பொருத்துதல் ' என்ற திறந்த வெளிப்போட்டியும், மாலை 3.30 மணிக்கு நிறைவு விழாவும் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம். எனவே நிகழ்ச்சி களில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தகுதியுடையவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட அறிவியல் மையம் சார்பில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு 94429 94797 என்ற எண்ணையோ sciencecentrenellaiednprog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் என அதிகாரி எஸ்.எம்.குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News