உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு நடைபெற்றபோது எடுத்த படம்.

பனை தொழிலாளர் கருத்தரங்கு

Published On 2022-12-19 09:10 GMT   |   Update On 2022-12-19 09:10 GMT
  • பனைத் தொழிலாளா்கள் கருத்தரங்கு கூட்டம் அசோகன் தலைமையில் நடைபெற்றது.
  • வங்கியின் உதவியை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்று ராயப்பன் விளக்கி பேசினார்.

தூத்துக்குடி:

பனைத் தொழிலாளா்கள் கருத்தரங்கு கூட்டம் தருவைக்குளம் காமராஜா் நற்பணி மன்ற தலைவா் அசோகன் தலைமையில் நடைபெற்றது. நற்பணி மன்ற பொருளாளா் தேவதிரவியம் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு பனைத்தொழிலாளா் சங்க பொதுச்செயலாளா் ராயப்பன் கலந்து கொண்டு பேசுகையில், தற்போது பனை தொழிலாளர்கள் வங்கியின் உதவியையும் தமிழக அரசின் உதவியையும், எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விளக்கி பேசினார்.

தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு பனைத் தொழிலாளா்கள் சங்க தலைவா் குளத்தூா் சுப்பிரமணியபுரம் அாிபாகரன், பனைவாாிய உறுப்பினா் எடிசன், ராஜபாளையம் பனை தொழிலாளர் ஜெயராஜ், தருவை குளம் பனை தொழிலாளர் பிச்சையா ஆகியோர் பனையின் வரலாறு பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் பேசினர். மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள ரேசன் கடையில் சா்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட காமராஜா் நற்பணி மன்ற தலைவா் லாரன்ஸ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News