உள்ளூர் செய்திகள்

சென்னையில் பஞ்.தலைவர்கள் 14-ந்தேதி ஆர்ப்பாட்டம்- தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 400 பேர் பங்கேற்பு- ஒருங்கிணைப்பாளர் தகவல்

Published On 2022-09-09 07:50 GMT   |   Update On 2022-09-09 07:50 GMT
  • மாநில தலைவர் முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
  • ஆர்ப்பாட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

கடையம்:

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக்கோரி சென்னையில் வள்ளுவர் கோட்டம் முன்பு வருகிற 14-ந் தேதி தமிழ்நாடு பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது குறித்து தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைப்பாளர் டி.கே.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் வருகிற 14-ந்தேதி பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பட்டியலின மற்றும் பெண் ஊராட்சி தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளுக்கான டெண்டரை ஊராட்சியே முடிவு செய்ய அதிகாரம் வழங்க வேண்டும், ஊராட்சி தலைவர்களுக்கு மாதம் ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற கூட்டமைப்பின் சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்கின்றனர். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுக்க உள்ளோம்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிகமானோர் பங்கேற்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரெயில் மூலமாகவும், ஆம்னி பஸ்கள் மூலமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News