உள்ளூர் செய்திகள்

மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா - நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2023-03-24 09:30 GMT   |   Update On 2023-03-24 09:30 GMT
  • பங்குனி உத்திர திருவிழா 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
  • விழாவின் 6-ம் நாளான 31-ந்தேதி அன்னதானம் நடக்கிறது.

குரும்பூர்:

குரும்பூர் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் (26-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முன்னதாக காலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமமும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடக்கிறது. இதையொட்டி காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு புஷ்ப அலங்கார உச்சிகால சிறப்பு பூஜையும், இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலில் வலம் வருதலும் நடக்கிறது.

இதனைத்தொடர்ந்து விழாவின் 6-ம் நாளான 31-ந்தேதி பகல் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 10-ம் நாளான வருகிற

(4-ந்தேதி) பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

இதையொட்டி காலை 8.30 மணிக்கு ஹோமமும், 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு மேல் பங்குனி உத்திர கும்பாபிஷேகமும் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு சுவாமி அம்பாள்களுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது.

திருவிழாவின் 10 நாட்களும் இரவு 8 மணிக்கு சிறப்பு கலைநிகழ்ச்சிகளும், இரவு 11 மணிக்கு உற்சவ அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலில் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

ஏற்பாடுகளை நிர்வாகிகள் ஆத்திக்கண் நாடார், அகோபால் நாடார், உதயகுமார் நாடார், தினேஷ் நாடார், செந்தில் நாடார், நாராயணராம் நாடார், கண்ணன் நாடார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News