பரமத்திவேலூர், மோகனூர் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- காவிரி ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரி–கள் அறிவுறுத்தி உள்ளனர்.
- நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல் மற்றும் துணி துவைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது.
பரமத்திவேலூர்:
மேட்டூர் அணை நிரம்பியதை தொடர்ந்து பரமத்தி வேலூர், மோகனூர் தாலுகாவுக்கு உட்பட்ட காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரி–கள் அறிவுறுத்தி உள்ளனர்.
பரமத்தி வேலூர், மோகனூர் தாலுகாவிற்கு உட்பட்ட காவிரி கரையோரம் உள்ள பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல் மற்றும் துணி துவைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது.
நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து பொதுமக்களுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும்.
மேலும், பாதிக்கப்படக்–கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அவசர கால உதவிக்கு, மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம்-1077, காவல் துறை-100, தீயணைப்பு துறை-101, மருத்துவ உதவி-104, ஆம்புலன்ஸ் உதவி-108 ஆகியவற்றிற்கும் மற்றும் பரமத்திவேலூர் வட்டத்திற்கு 94450 00546, மோகனூர் வட்டத்திற்கு 99524 12755, ஆகிய எண்களில் சம்மந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.