வண்ணார்பேட்டையில் சி.ஐ.டி.யூ. சார்பில் வாகனம் நிறுத்தும் போராட்டம்
- சி.ஐ.டி.யூ. சார்பில் வாகனம் நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நெல்லை:
புதிய வாகன மோட்டார் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், 15 ஆண்டுகளான வாகனங்களை அழிக்கும் உத்தரவை திரும்ப பெறக்கோரியும், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும் சி.ஐ.டி.யூ. சார்பில் இன்று வாகனம் நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது. நெல்லை வண்ணார் பேட்டையில் சி.ஐ.டி.யூ. சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யூ. ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் ஜோதி முன்னிலை வகித்தார்.
இதில் ஏராளமான தொழி லாளர்கள் வாகனங்களுடன் பங்கேற்று சாலையில் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல அம்பை, பாப்பாக்குடி, திசை யன்விளை உள்ளிட்ட இடங்களிலும் சி.ஐ.டி.யூ. சார்பில் போராட்டம் நடந்தது.