சுருக்குவலை மீனவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை
- சுருக்கு வலை, இரட்டை மடி வலை உள்ளிட்ட வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
- மீனவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக மீன்பிடித் தொழில் செய்ய முடியாமல் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக கூறினர்.
சீர்காழி:
சுருக்குவலையை பயன்படுத்தி மீன்படிக்க அனுமதிக்கவேண்டும் என சுருக்குவலை ஆதரவு 18மீனவ கிராம பிரதிநிதிகள் சீர்காழி கோட்டாட்சியரிடம் அமைதி பேச்சுவார்த்தையின்போது செவ்வாய்கிழமை வலியுறுத்தினர்
மீன்பிடி தடை காலம் செவ்வாய்கிழமை இரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் கடலோரப் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வெள்ளைமணல் பூம்புகார் சின்னுர்பேட்டை, சந்தரபாடி வரையிலான 18 மீனவ கிராமங்களில் சுருக்குவலை பயன்படுத்தும் மீனவர்கள் வசித்து வருகின்றனர்.
அரசின் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983 இல் உள்ள இருபத்தியோரு விதிகளில் காரணமாக கடந்தமூன்று ஆண்டுகளாக சுருக்கு வலை, இரட்டை மடி வலை உள்ளிட்ட வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளை மீன்பிடி தடை காலம் முடிவடையவதையொட்டி சுருக்குவலை பயன்படுத்தும் மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி கோட்டாட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குவலை மீனவர்களை அழைத்து சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் அர்ச்சனை தலைமை யில்அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.
வட்டாட்சியர் செந்தி ல்குமார், டிஎஸ்பிலாமெக், கடலோர காவல் அமலா க்கபிரிவு இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா மற்றும் மீன்வளத்துறை அதிகா ரிகள் முன்னிலை வகி த்தனர்.அப்பொழுது தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்யக்கூடாதுஎன கோ ட்டாட்சியர் தெரிவித்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்க மறுத்த மீனவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக மீன்பிடித் தொழில் செய்ய முடியாமல் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும் எனவே எவ்வித தடையுமின்றி வழக்கம் போல் இந்த ஆண்டு தங்கள் மீன்பிடித் தொழிலை செய்ய அனுமதிக்க வேண்டு மெனவும் கோரிக்கை விடுத்து கலை ந்து சென்றனர்.
மேலும் மீன்பிடி ஒழுங்கு முறைசட்டத்தை முழுமையாக அமல்படு த்தவும் கோரிக்கை விடுத்து ள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.