உள்ளூர் செய்திகள்

கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் அபராதம்:விழுப்புரம் கலெக்டர் எச்சரிக்கை

Published On 2023-08-06 06:57 GMT   |   Update On 2023-08-06 06:57 GMT
  • அமலாக்க அலுவலகம், சென்னை, குறளகம் 2ஆம் தளத்தில் செயல்பட்டு வருகிறது.
  • அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நம் நாட்டின் பார ம்பரிய கலாச்சாரத்தை பாதுகா க்கவும், விசைத்தறியாளர்கள் மற்றும் துணி ஆலைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து கைத்தறியாளர்களை பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மத்திய அரசு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 இயற்றப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தினை விவகார எல்லையாகக் கொண்டு துணை இயக்குநர், அமலாக்க அலுவலகம், சென்னை, குறளகம் 2ஆம் தளத்தில் செயல்பட்டு வருகிறது.

கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 சட்டப்பிரிவு 5-ன் கீழ் ஒரு சில தொழில்நுட்ப குறிப்பீ டுகளுடன் 11 இரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்திட தடை செய்யப்பட்டுள்ளது. பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமக்காளம் மற்றும் சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை இரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு, விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கிடு சட்டம் 1985-ன் படி தண்டனைக்குரிய செயலாகும். இதுகுறித்து அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும். நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 6 மாத சிறை தண்டனை அல்லது தறி ஒன்றுக்கு ரூ.5000 வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை வழங்கப்படும். எனவே விழுப்புரம் மாவட்ட விசைத்தறியாளர்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டஇரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News