உணவுப் பொட்டலங்களில் காலாவதி தேதி குறிப்பிடாத கடைகளுக்கு அபராதம் நாமக்கல் கலெக்டர் எச்சரிக்கை
- பேக்கரி கடைகளில் இனிப்பு மற்றும் கார வகை தின்பண்ட பொட்டலங்களில் காலாவதியாகும் தேதி நுகா்வோருக்கு எளிதில் தெரியும் வகையில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
- காலாவதியான உணவு வகைகளை பயன்படுத்துதலை தடுத்தல் உள்ளிட்டவை தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட வழங்கல் துறை சாா்பில், நுகா்வோா் குறைதீா் கூட்டம் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது.
இதில், உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் தரம், பயன்பாடு, தரத்தில் குறைபாடுகள் போக்குதல், காலாவதியான உணவு வகைகளை பயன்படுத்துதலை தடுத்தல் உள்ளிட்டவை தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் பேசியதாவது:-
பேக்கரி கடைகளில் இனிப்பு மற்றும் கார வகை தின்பண்ட பொட்டலங்களில் காலாவதியாகும் தேதி நுகா்வோருக்கு எளிதில் தெரியும் வகையில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு தேதி குறிப்பிடாத கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். நுகா்வோா் வழங்கும் புகாா் மனுவினை முறையாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் கூட்டுறவுத் துறைகளின் இ-சேவை மையங்களில் அரசால் நிா்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் மட்டும் வசூ லிக்கப்பட்டு வருகிறது. புகாா் மனுக்களின் மீது அபராதம் மற்றும் இயக்கத் தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டப் பேரவை எம்.எல்.ஏ. ஈஸ்வரன், மாவட்ட வழங்கல் அலுவலா் ரமேஷ், துறை சாா்ந்த அலுவலா்கள், நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.