உள்ளூர் செய்திகள் (District)

பெரம்பலூர் நகராட்சி சார்பில் கூடுதல் பஸ் ஸ்டாண்ட்

Published On 2023-10-02 08:21 GMT   |   Update On 2023-10-02 08:21 GMT
  • பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் ரூ.3.72 கோடியில் கூடுதல் பஸ் ஸ்டாண்ட் கட்ட திட்டம்
  • பெரம்பலூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

பெரம்பலூர், 

பெரம்பலூர் நகராட்சி கூட்டரங்கில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் அம்பிகா தலைமை வகித்தார். ஆணையர் ராமர், நகராட்சி துணைதலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்டு கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் நிறைவேற்றப்படவேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்து பேசினர்.பின்னர் நகராட்சி தலைவர் அம்பிகா பேசுகையில் நகர பொதுமக்கள் நலன் கருதி கவுன்சிலர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் ரூ 3 கோடியே 72 லட்சம் செலவில் கூடுதல் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும் என தெரிவித்தார்.கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படவுள்ள நகராட்சி அறிவுசார் மையத்திற்கு ரூ.10 லட்சத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்ததற்கும் அனுமதி வழங்குதல், ரூ.22 லட்சம் செலவில் பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்டில் சேதமடைந்த தார் சாலையை சீரமைப்பது, பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் ரூ.372 கோடி செலவில் கூடுதல் பஸ் ஸ்டாண்ட் அமைப்பது என்பது உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர், கவுன்சிலர்கள், சுகதார ஆய்வாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News