உள்ளூர் செய்திகள் (District)

குன்னத்தில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

Published On 2023-10-14 07:24 GMT   |   Update On 2023-10-14 07:24 GMT
  • நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் குன்னத்தில் நடைபெற்றது
  • மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசினார்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் தெற்கு ஒன்றியம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிரணி பொறுப்பாளர்கள் அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் குன்னம் பி.கே.எம். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இளம்பை தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாசலம் முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் குன்னம் குணசீலன் வரவேற்றார்.கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் பேசியதாவது,நாம் அனைவரும் வருகிற பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி உள்ள நிலையில் முன்னாள் முதல்வர், ஜெயலலிதா அரசின் கனவு திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியவர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா சட்டமன்ற கூட்டத்தொடரில் கூறியது போல போல எனக்குப் பின்னாலும் 100 ஆண்டு காலம் கட்சியும், ஆட்சியும் இருக்கும் என கூறினார். அது தற்போது தொடர வேண்டும். அம்மாவின் வழியில் இன்றைக்கு எடப்பாடியார் கட்சியை வழி நடத்தி வருகின்றார்.தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கிடைக்கக்கூடிய 32 டி எம் சி தண்ணீர் குறைந்து கொண்டே வருகிறது. திமுகவின் கூட்டணியான காங்கிரஸ் கர்நாடாகாவில் ஆட்சி நடத்துகிறது. ஆனால் காவேரி தண்ணீர் பெற தமிழக மக்களுக்காக ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மும்மாரி மழை பெய்து விவசாயிகளின் துயர் துடைத்தும், விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணையிலிருந்து அதிகபடியாக திறந்து விட்டு டெல்டா விவசாயிகளின் காவலராக இருந்தவர் எடப்பாடியார். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் முன்னாள் எம்பி சந்திரகாசி, வழக்கறிஞர் கே.என் ராமசாமி, மாவட்ட எம் ஜிஆர் மன்ற செயலாளர் எம்.என். ராஜாராம், முன்னாள் எம்எல்ஏ பூவைச் செழியன், மாவட்ட இணை செயலாளர் ராணி, மாவட்ட துணை செயலாளர் லட்சுமி மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் இளஞ்செழியன்,மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநரணி செயலாளர் முத்துசாமி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் சந்திரகாசன், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் குன்னம் இளங்கோவன், சித்தளி நாகராஜ் குன்னம் ரங்கநாதன், அமுதா முருகேசன், குன்னம் கிளைச் செயலாளர்கள் மதியழகன், ராஜா, சடையாண்டி, மகாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் வர்த்தக அணி மாவட்டச் செயலாளர் ஏ கே ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News