உள்ளூர் செய்திகள் (District)

உயர்கல்வி முடிக்கும் ஆசிரியர்களுக்குபழையமுறையில் ஊக்க தொகை வழங்க கோரிக்கை

Published On 2023-10-30 06:10 GMT   |   Update On 2023-10-30 06:10 GMT
  • ஆசிரியர்கள் படித்துக் கொண்டே இருந்திட வேண்டு என்பதற்காக உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கினார்.
  • ஆனால் உயர்கல்வி முடித்திடும் அனைவருக் கும் பழையமுறையில் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரு கின்றோம்.

பெரம்பலூர்

தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ள தாவது:-

அண்ணாத்துரை தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த போது ஆசிரியர்கள் படித்துக் கொண்டே இருந்திட வேண்டு என்பதற்காக உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கினார்.

இது தொடர்ந்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக 2020-ல் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு அரசிற்கு ஏற்பட்ட நிதிச் சுமையால் ஆசிரியர்களுக்கு காலம் காலமாக வழங்கி வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மாற்றி அமைத்து அரசாணை வெளியிட்டதில் 9.3.2020-க்கு முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதியம் பெறாத ஆசிரியர்களிடம் கருத்துருக்கள் பெற்று அதன் அடிப்படையில் பழைய முறையில் ஊக்க ஊதியம் வழங்கிட நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

ஆனால் உயர்கல்வி முடித்திடும் அனைவருக் கும் பழையமுறையில் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரு கின்றோம்.

எனவே முதல்வர் உயர்கல்வி முடித்திட்ட ஆசிரியர்களுக்கு பழைய முறையில் கணக்கிட்டு ஊக்க ஊதியம் வழங்கிட ஆணை பிறப்பித்திட வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News