உள்ளூர் செய்திகள் (District)

இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

Published On 2023-02-14 07:33 GMT   |   Update On 2023-02-14 07:33 GMT
மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது

அகரம்சீகூர்,

அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாடு பேரூராட்சி வளாகத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ, கால்நடை துறை சார்பில் செல்ல பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் லெப்பைக்குடிக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர், தாங்கள் வளர்க்கும் நாய், பூனைகளை கொண்டு வந்து கால்நடை மருத்துவர்களிடம் பரிசோதனை செய்தனர். செல்லப்பிராணிகளுக்கு நோய் தாக்கம், பராமரிப்பு குறித்தும் பிராணிகள் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசியும் இலவசமாக போடப்பட்டது. இம்முகாமில் மண்டல இணை இயக்குனர்சுரேஷ் கிறிஸ்டோபர், கால்நடை உதவி இயக்குனர் குணசேகரன், லெப்பைக் குடிக்காடு பேரூராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன், ஒன்றிய கவுன்சிலர் கருப்பையா, கால்நடை உதவி மருத்துவர்கள் இ.ராமகிருஷ்ணன், திருநாவுக்கரசு , கால்நடை ஆய்வாளர் பிரேமா,மற்றும் உதவியாளர்கள் சின்னதுரை, ராஜசேகரன், கால்நடை மருத்துவக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் அருள் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பென்னங்கோணம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Tags:    

Similar News