உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு துறை பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசு

Published On 2023-11-11 04:51 GMT   |   Update On 2023-11-11 04:51 GMT
  • பொதுத்தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு துறை பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது
  • மதிப்பெண் விவரங்களின் பட்டியலை அனுப்பி வைக்க அழைப்பு

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்ந்த அனைத்து வகை அரசு அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனப் பணியாளர்களின் குழந்தைகள் கடந்த மார்ச் 2023-ம் ஆண்டு பொதுத்தேர்வில் 10-ம் வகுப்பில் 500க்கு 480 மதிப்பெண்களுக்கும், 12-ம் வகுப்பில் 600-க்கு 580 மதிப்பெண்களுக்கும் அதிகம் பெற்ற முதல் 3 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு கூட்டுறவு வாரவிழாவில் அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

எனவே கூட்டுறவுத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுவோரின் மகன் மற்றும் மகள் ஆகியோரின் ஒப்புதல் செய்யப்பட்ட மதிப்பெண் விவரங்களின் பட்டியலை (அட்டெஸ்ட் காப்பி) வரும் 15-ந் தேதிக்குள் செயலாட்சியர் பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிம், எண் 5, கே.ஆர்.காம்ப்லக்ஸ், துறைமங்கலம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Similar News