உள்ளூர் செய்திகள் (District)

பெரியார் சிலை சேதப்படுத்திய கூலித்தொழிலாளி கைது

Published On 2023-10-03 09:32 GMT   |   Update On 2023-10-03 09:32 GMT
  • பெரம்பலூரில் பெரியார் சிலை சேதப்படுத்திய கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டு உள்ளார்
  • சிலை சேதப்படுத்தியதை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம், மறியல்

பெரம்பலூர்,-

பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய நுழைவாயில் அருகில் அ.தி.மு.க. சார்பில் ஒரே பீடத்தில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.அதில் பெரியார் சிலையின் இடது கை பெருவிரல் சேதப்படுத்தப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க.வினர், மாவட்ட செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவை தலைவர் குணசீலன், ஒன்றிய கழக செயலாளர்கள், கர்ணன், சிவப்பிரகாசம், செல்வகுமார் நகர கழக செயலாளர் ராஜ பூபதி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஏ, கே ராஜேந்திரன் முன்னாள் ஒன்றி செயலாளர் முள்ளுக் குறிச்சி சுரேஷ், குன்னம் ரங்கநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறுகையில், பெரம்பலூரில் புது பஸ்ஸ்டாண்ட் வளாகம் அருகில் அ.தி.மு.க.வினர் வைத்துள்ள பெரியார் சிலையை வேண்டுமென்றே திட்டமிட்டு சில விஷமிகள் சேதப்படுத்தி இருக்கிறார்கள். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற விஷமிகளின் குற்ற செயல்கள் தொடருமேயானால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். பெரம்பலூர் மாவட்ட காவல்துறை இதனை போன்ற விஷம செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இரவு நேரங்களில் ரோந்து பணியை விரைவுபடுத்தி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தடுத்திட வேண்டும் என தெரிவித்தார்.

.போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினருடன், பெரம்பலூர் டி.எஸ்.பி. சுக்கிரன் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சிலையை சேதப்படுத்தியது குறித்து உரிய விசாரணை நடத்தி, மர்ம நபர் கைது செய்யப்படுவார் என்று உறுதி அளித்தார். சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சிலை சேதப்படுத்தியது தொடர்பாக, அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா உதவியுடன், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் அனுசந்திரன் (வயது 37) என்ற கூலித்தொழிலாளி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், குடிபோதையில் பெரியார் சிலை அருகே படுத்திருந்ததாகவும், பெரியாரின் சிலையில் உள்ள விரலை பிடித்து எந்திரிக்க முயற்சித்த போது, உடைந்து விட்டதாகவும், இதனால் தான் பயன்படுத்திய சிவப்பு துண்டை வைத்து, மறைத்து விட்டு சென்றதாகவும், ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News