உள்ளூர் செய்திகள்

தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் போட்டி

Published On 2023-04-11 07:07 GMT   |   Update On 2023-04-11 07:07 GMT
  • சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது
  • வெற்றி பெற்ற மாநில அணிகளுக்கு பரிசு

பெரம்பலூர், 

தேசிய பாரா ஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பு, மாநில பாரா வாலிபால் சங்கம், ஈரோடு மாவட்ட வாலிபால் சங்கம், உணர்வுகள் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்திய தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் சேம்பியன்ஷிப்-2023 போட்டி பெரம்பலூரில் 2 நாட்கள் நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டிக்கான தொடக்க விழாவில், ஆல்மைட்டி பள்ளி தாளாளர் ராம்குமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தேசிய பாரா ஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பின் தலைவர் சந்திரசேகர், மாநில தலைவர் மக்கள்ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். முதல் நாள் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் அங்கயற்கன்னி துவக்கி வைத்தார். இதில் ஜார்கண்ட், ராஜஸ்தான், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஹிரியானா, இமாச்சலபிரதேசம், தெலுங்கனா உட்பட 20 மாநிலங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.ஆண்கள் பாராவாலி போட்டியில் கர்நாடகா முதல் இடமும், ராஜஸ்தான் 2ம் இடமும், தமிழ்நாடு 3ம் இடமும், ஹரியானா 4ம் இடமும் பெற்றன. பெண்கள் பாரா வாலி போட்டியில் ராஜஸ்தான் முதலிடமும், ஜார்கண்ட 2-ம் இடமும், கர்நாடகா 3-ம் இடமும், ஹரியானா 4-ம் இடமும் பெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், கேடயங்களும், பெரம்பலூர் ஐஓபி, அஸ்வின்ஸ் குழுமம், உதவியுடன் வழங்கப்பட்டது. பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, தமிழ்நாடு பாரா வாலி சங்க துணைசெயலாளர்கள் ஜெயபிரபா, கண்ணன், மாநில நடுவர்குழு தலைவர் ஜாபர், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், பாராவாலி பெரம்பலூர் மாவட்ட தலைவர் ரஞ்சித்குமரன், செயலாளர் இளங்கோவன், பொருளாளர் சீனீவாசன் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுரேஷ், ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி துணைத்தலைவர் மோகனசுந்தரம், செயலாளர் சிவக்குமார், சங்கீதா கோபிநாத், பள்ளி முதல்வர் ஹேமா, ஆசிரியர்கள் சந்திரோதயம், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News