சிறுவாச்சூர் அருகே - அய்யப்ப பக்தர்களுக்கான அன்னதான முகாம் தொடக்கம்
- மூன்றாவது ஆண்டாக அய்யப்ப பக்தர்களுக்கான அன்னதான முகாம் தொடங்கப்பட்டது.
- இங்கு கார்த்திகை,மார்கழி என இரண்டு மாதம் முழுவதும் என வரும் ஜனவரி 14-ம்தேதி வரை என 60 நாட்கள் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.
பெரம்பலூர்
அகில பாரத அய்யப்ப சேவா சங்க பெரம்பலூர் மாவட்ட யூனியன் சார்பாக சிறுவாச்சூர் மலையப்ப நகர் பிரிவு அருகே மூன்றாவது ஆண்டாக அய்யப்ப பக்தர்களுக்கான அன்னதான முகாம் தொடங்கப்பட்டது.
முன்னதாக காலை 6 மணிக்கு கணபதி ஹோ மமும் அதனை தொடர்ந்து கோ பூஜை நடந்தது. தனலட்சுமி குழுமத்தின் தலைவர் சீனிவாசன் அன்ன தான கூடத்தை திறந்து வைத்தார். அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன் சங்க கொடியினை ஏற்றி வைத்தார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவன தலைவர் சிவசுப்பிரமணியன் , லயன்ஸ் கிளப் ஆளுநர் இமயவரம்பன் , முன்னாள்
விக்டரி லயன்ஸ் கிளப் தலைவர் குணசீலன் , முன்னாள் ஊராட்சி தலைவர் ராமராஜ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் மத்திய துணை தலைவரும், மாநில இணை செயலாளரும், திருச்சி மாவ ட்டத்தின் செயலாளருமான ஸ்ரீதர் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இதில் சங்க கவுரவ தலைவர் சேகர், மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் பால கிருஷ்ணன், பொருளாளர் தியாகராஜன், துணை தலைவர்கள் கோவிந்தராஜ், ரவீந்திரன், இணை செயலாளர் சதீஷ்குமார், ஆலோசகர் ரவிச்சந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு கார்த்திகை,மார்கழி என இரண்டு மாதம் முழுவதும் என வரும் ஜனவரி 14-ம்தேதி வரை என 60 நாட்கள் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மாலை அணிந்து அய்யப்பன் சுவாமி கோவிலுக்கு செல்லும் அய்யப்ப பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்க ப்படுகிறது.