உள்ளூர் செய்திகள் (District)

வேளாண் பட்டதாரிகளுக்கு புதிதாக வேலைவாய்ப்பு - முதல்வரிடம் கோரிக்கை மனு

Published On 2023-10-30 06:07 GMT   |   Update On 2023-10-30 06:07 GMT
  • முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
  • பசுமை தமிழகத்தை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் மாநில தலைவர் அக்ரி மாதவன் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த அம்மனுவில் கூறப் பட்டுள்ளதாவது, வேளாண் அறிவியல் கல்வியை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் அறிமுகம் செய்து வேளாண்மை பட்ட தாரிகளை முதுநிலை ஆசிரி யர்களாக நியமனம் செய்ய வேண்டுதல்.

மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் வேளாண் அறிவியல் ஆசி ரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை தொழில்நுட்ப பட்டதாரிகளை பள்ளிக்கல்வித்துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆகியவற்றில் உரிய பணியிடங்களில் நியமனம் செய்து பல்லாயிரக்கணக்கான வேலையில்லா வேளாண் பட்டதாரிகளின் வாழ்வில் ஒளி ஏற்றி பசுமை தமிழகத்தை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News